Skip to main content

Posts

அறிவா் மரபு கண்ட ஆசு மருத்துவம்

காடுகளிலும் குகைகளிலும் திரிந்து வாழ்ந்த ஆதிமனிதனுக்கு இடி மின்னல், புயல், நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களையடுத்துப் பேரச்சம் தந்தவை வனவிலங்குகளும், தொற்றுநோய்களும் தான் மாந்த இனம் அறிவிலும் அறிவியலிலும் முன்னேறிய போது நோய்களுக்கான தடுப்பு மருத்துவம் பற்றியும், வந்த நோய்களக்குத் தீா்வு காணும் முறைபற்றியும் விழிப்புணா்வு ஏற்படத் தொடங்கியதே மருத்துவத்தின் தொடக்கக் காலமாகும். குமரிக் கண்டத்துத் தமிழன்தான் உலகின் முதல் முதலுதவிப் பெட்டியைக் கண்டுபிடித்தான் என்ற உண்மை நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது. ஓா் மாந்த இனம் முதலுதவிப் பெட்டியைப் பல்லாயிரம் ஆண்டுளாக வீடுகள் தோறும் வைத்திருந்ததென்றால், உலகில் முதன் முதலாக மருத்துவ அறிவியலை உருவாக்கி வளா்த்ததே அந்த மொழியினம் தான் என்பதும் மறுக்கப்படவியலாததாம். ஒவ்வோர் வீட்டிலும் ஒரு முதலுதவிப் பெட்டி வைப்பதென்றால் அந்த இனம்மருத்துவ அறிவியலில் எவ்வளவு செம்மாந்த நிலையில் இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்!  அம்முதலுதவிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொதுவான சில பொருள்களையும் அவற்றின் பயன்பாட்டையும் காணலாம். அம்முதலுதவிப் பெட
Recent posts

ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும்

தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன. எழுத்துப் பாலியலில் பெண் எழுத்துக்களாகக் கருதப்படும் இவையே ஊழ்க மெய்யியலில் (யோகம்) முதன்மையான இடத்தைப் பெற்றவை. தமிழின் பிற எழுத்துக்கள் மொழிக்கு இலக்கணம் கூறும்காலை, இவ்வெழுத்துக்கள் மெய்யியலுக்கு இலக்கணம் கூற வல்லவை. இவற்றுள் ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும், நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும். ஐயம் என்னும் சொல் சேட்டுமத்தைக் குறிப்பதாகும். ஐயம் > ஐ+ய்+அம் ஐ - பகுதி ய் - உடம்படுமெய் அம் - விகுதி ஐயம் என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாம். இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ‘ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம். இந்த ஐய நிலை கைவரப் பெற்ற ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே ஐயன் எனவும் ஐயனார் எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது. ஐயன் > ஐ+ய்+அன் ஐ - பகுதி ய் - உடம்படுமெய் அன் - ஒருமை ஆண்பால் விகுதி இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே ஐயனார் எ

ஆதித் தமிழர் மெய்யியல் - ஆதி. சங்கரன்

ஆதித் தமிழர் மெய்யியல் ஆதி. சங்கரன் முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம். பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம். 1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல். 2. ம

உலகாய்தம் பெயர்க்காரணம் - முனைவர் க.நெடுஞ்செழியன்

மனித வாழ்வை அடித்தளமாகக் கொண்டதோர் உலகியல் கோட்பாடே உலகாய்தம். இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகக் குறிக்கப்படுவதைப் போன்றே தமிழகத்தில் வழங்கிய மெய்ப்பொருள்களிலும் காலத்தால் மிகவும் முந்தியதாக இக்கோட்பாடு திகழ்ந்துள்ளது. இக்கோட்பாட்டிற்கெனத் தனியாக நூல்கள் வழங்கி வந்ததாகவும், அரசர்கள் கற்க வேண்டிய தலையாய கல்வித் துறைகளை இது உள்ளடக்கி இருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். இருப்பினும் இக்காலத்தில் உலகாய்தத்தை அடிப்படையாகக் கொண்ட மூலநூல்கள் ஏதும் இல்லை. கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் இதனை எதிர்த்தோரும் மறுத்தோரும் குறித்துள்ள குறிப்புகளாகவே உள்ளன. மேலும் படிக்க

சங்கம் குறித்த சிவத்தம்பி ஆய்வு பிழையானது - முனைவர் இரா.சக்குபாய்

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு, சங்க இலக்கியங்களின் தொன்மை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சங்க இலக்கியங்கள் கி.பி. 1274இல் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்டன என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது வருந்தத் தக்கது. பேரா. கா. சிவத்தம்பியின் "சங்கமும், சங்க இலக்கியமும்" எனும் கட்டுரைத் தொடர், தினமணியில் 4, 11-05-2008 ஆகிய இரு நாள்களில் வந்தது. தமிழ் மரபு அனைத்துமே காலத்தால் பிற்பட்டன என்றும் சைனம் முதலிய சமயங்களின் வழியாகத் தமிழுக்கு வந்தவை என்றும் மிக மிக அபத்தமாக அக்கட்டுரைத் தொடர் அமைந்திருந்தது. அதற்கான மறுப்பே இக்கட்டுரை. மேலும் படிக்க

வள்ளுவரும் கணியரும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

தமிழில் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்களும், பல பொருளை உணர்த்த ஒரு சொல்லும் நிறைய வழக்கில் உள்ளன. அகராதிகளும், நிகண்டுகளும் இந்த அடிப்படையில்தான் தொகுக்கப் பட்டுள்ளன. இப்பின்னணியில் வள்ளுவர், கணியர் ஆகிய இரு சொற்கள் உணர்த்தும் பொருளை-தொழிலை விளக்குவது இன்றியமையாததாகும். கணியர்கள் பெரும் துறவிகளாகவும், அரசவையின் உள்படு கருமத்துள் பொறுப்பு வகிப்போராகவும் விளங்கியவர்கள். அத்துடன் வானியல், அறிவியல் துறைபோகி, காலத்தைக் கணிப்பவர்களாகவும் நாளும் கோளும் அறிந்து நிமித்தம் கூறுவதில் வல்லவர்களாகவும் விளங்கியவர்கள் என்பது இவ்வியலின் தொடக்கத்துள் விளக்கப் பட்டுள்ளது. மேலும் படிக்க

கணியம் எனும் சோதிடம் அறிவியலா? மூடத்தனமா? - ஆதி சங்கரன்

சித்தர் பெருமக்களின் இரக்கத்தினால் இயங்கும் புவியுயிர்ச் செயல்பாடுகளில் "கோள்நூல்" எனப்படும் சோதிடம் என்பது பாமரத் தனமான மூட நம்பிக்கையா? அல்லது இயற்கையின் ஆணைக்கொப்ப இயக்கப்படும் ஒரு ஒழுங்கான நிகழ்வமைப்பா என்பதே இங்குக் காணப் போந்த கருத்தாகும். முதற்கண், கோள்களின் இயக்கங்களை வரையறைப் படுத்திக் காணுகையில் ஒவ்வொரு கோளுக்கும் இயல்பே அமைந்ததான வடிவம் கோள வடிவமாகும். கோள் எந்த வடிவத்தை உடையதாக உள்ளதோ அவ்வடிவம் "கோளம்" எனப்பட்டது. கோள வடிவம் எனவும் வழங்கத் தலைப்படலாயிற்று. புவியின் வடிவம் கோளம் என்று "கோபர்நிகஸ்" என்ற மேனாட்டு இயற்பியல் அறிஞர் அறிவதற்கு முன்னதாகவே புவி மட்டுமின்றி ஏனைய கோள்களும் உருண்டை வடிவம் கொண்டவையே என மாணிக்க வாசக சுவாமிகள் பாடியுள்ளார். "அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்..." (திருவண்டப் பகுதி, திருவாசகம்) தொன் தமிழ்ச் சான்றோர் கோள்களின் பாதைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றின் விளைவுகளாய "ஒளி மறைவு" (கிரகணம்), பருவ கால மாற்றங்களை முன் உரைத்தமை யாவரும் அறிந்ததே. இனி சோதிடம் எனப்படும் கோள்நூல் பற்றி ஆயுங்கால், ஒவ்வொரு மனித