Skip to main content

Posts

Showing posts from 2008

உலகாய்தம் பெயர்க்காரணம் - முனைவர் க.நெடுஞ்செழியன்

மனித வாழ்வை அடித்தளமாகக் கொண்டதோர் உலகியல் கோட்பாடே உலகாய்தம். இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகக் குறிக்கப்படுவதைப் போன்றே தமிழகத்தில் வழங்கிய மெய்ப்பொருள்களிலும் காலத்தால் மிகவும் முந்தியதாக இக்கோட்பாடு திகழ்ந்துள்ளது. இக்கோட்பாட்டிற்கெனத் தனியாக நூல்கள் வழங்கி வந்ததாகவும், அரசர்கள் கற்க வேண்டிய தலையாய கல்வித் துறைகளை இது உள்ளடக்கி இருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். இருப்பினும் இக்காலத்தில் உலகாய்தத்தை அடிப்படையாகக் கொண்ட மூலநூல்கள் ஏதும் இல்லை. கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் இதனை எதிர்த்தோரும் மறுத்தோரும் குறித்துள்ள குறிப்புகளாகவே உள்ளன. மேலும் படிக்க

சங்கம் குறித்த சிவத்தம்பி ஆய்வு பிழையானது - முனைவர் இரா.சக்குபாய்

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு, சங்க இலக்கியங்களின் தொன்மை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சங்க இலக்கியங்கள் கி.பி. 1274இல் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்டன என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது வருந்தத் தக்கது. பேரா. கா. சிவத்தம்பியின் "சங்கமும், சங்க இலக்கியமும்" எனும் கட்டுரைத் தொடர், தினமணியில் 4, 11-05-2008 ஆகிய இரு நாள்களில் வந்தது. தமிழ் மரபு அனைத்துமே காலத்தால் பிற்பட்டன என்றும் சைனம் முதலிய சமயங்களின் வழியாகத் தமிழுக்கு வந்தவை என்றும் மிக மிக அபத்தமாக அக்கட்டுரைத் தொடர் அமைந்திருந்தது. அதற்கான மறுப்பே இக்கட்டுரை. மேலும் படிக்க

வள்ளுவரும் கணியரும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

தமிழில் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்களும், பல பொருளை உணர்த்த ஒரு சொல்லும் நிறைய வழக்கில் உள்ளன. அகராதிகளும், நிகண்டுகளும் இந்த அடிப்படையில்தான் தொகுக்கப் பட்டுள்ளன. இப்பின்னணியில் வள்ளுவர், கணியர் ஆகிய இரு சொற்கள் உணர்த்தும் பொருளை-தொழிலை விளக்குவது இன்றியமையாததாகும். கணியர்கள் பெரும் துறவிகளாகவும், அரசவையின் உள்படு கருமத்துள் பொறுப்பு வகிப்போராகவும் விளங்கியவர்கள். அத்துடன் வானியல், அறிவியல் துறைபோகி, காலத்தைக் கணிப்பவர்களாகவும் நாளும் கோளும் அறிந்து நிமித்தம் கூறுவதில் வல்லவர்களாகவும் விளங்கியவர்கள் என்பது இவ்வியலின் தொடக்கத்துள் விளக்கப் பட்டுள்ளது. மேலும் படிக்க

கணியம் எனும் சோதிடம் அறிவியலா? மூடத்தனமா? - ஆதி சங்கரன்

சித்தர் பெருமக்களின் இரக்கத்தினால் இயங்கும் புவியுயிர்ச் செயல்பாடுகளில் "கோள்நூல்" எனப்படும் சோதிடம் என்பது பாமரத் தனமான மூட நம்பிக்கையா? அல்லது இயற்கையின் ஆணைக்கொப்ப இயக்கப்படும் ஒரு ஒழுங்கான நிகழ்வமைப்பா என்பதே இங்குக் காணப் போந்த கருத்தாகும். முதற்கண், கோள்களின் இயக்கங்களை வரையறைப் படுத்திக் காணுகையில் ஒவ்வொரு கோளுக்கும் இயல்பே அமைந்ததான வடிவம் கோள வடிவமாகும். கோள் எந்த வடிவத்தை உடையதாக உள்ளதோ அவ்வடிவம் "கோளம்" எனப்பட்டது. கோள வடிவம் எனவும் வழங்கத் தலைப்படலாயிற்று. புவியின் வடிவம் கோளம் என்று "கோபர்நிகஸ்" என்ற மேனாட்டு இயற்பியல் அறிஞர் அறிவதற்கு முன்னதாகவே புவி மட்டுமின்றி ஏனைய கோள்களும் உருண்டை வடிவம் கொண்டவையே என மாணிக்க வாசக சுவாமிகள் பாடியுள்ளார். "அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்..." (திருவண்டப் பகுதி, திருவாசகம்) தொன் தமிழ்ச் சான்றோர் கோள்களின் பாதைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றின் விளைவுகளாய "ஒளி மறைவு" (கிரகணம்), பருவ கால மாற்றங்களை முன் உரைத்தமை யாவரும் அறிந்ததே. இனி சோதிடம் எனப்படும் கோள்நூல் பற்றி ஆயுங்கால், ஒவ்வொரு மனித...

திருக்குறளும் ஊழியலும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

கால வரையறை செய்வதிலும் கருத்து வரையறை செய்வதிலும் ஆய்வாளர்களுக்குத் திருக்குறள் ஒரு பெரும் புதிராகவே உள்ளது. திருக்குறளை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கோட் பாடுகளோடு அணுகியுள்ள காரணத்தாலும், திருக்குறளின் சமூகப் பின்புலம் பற்றியோ அதன் மெய்யியல் பின்புலம் பற்றியோ கவலைப்படாத நிலையில் அதுபற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந் துள்ளதாலுமே திருக்குறளை முற்றாக அறியவும், அதன் கோட்பாடுகளை வகைப்படுத்தவும் முடியாத ஒருநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்

முனைவர் க. நெடுஞ்செழியன் அணிந்துரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார். ‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்...