Skip to main content

Posts

Showing posts from July, 2008

சங்கம் குறித்த சிவத்தம்பி ஆய்வு பிழையானது - முனைவர் இரா.சக்குபாய்

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு, சங்க இலக்கியங்களின் தொன்மை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சங்க இலக்கியங்கள் கி.பி. 1274இல் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்டன என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது வருந்தத் தக்கது. பேரா. கா. சிவத்தம்பியின் "சங்கமும், சங்க இலக்கியமும்" எனும் கட்டுரைத் தொடர், தினமணியில் 4, 11-05-2008 ஆகிய இரு நாள்களில் வந்தது. தமிழ் மரபு அனைத்துமே காலத்தால் பிற்பட்டன என்றும் சைனம் முதலிய சமயங்களின் வழியாகத் தமிழுக்கு வந்தவை என்றும் மிக மிக அபத்தமாக அக்கட்டுரைத் தொடர் அமைந்திருந்தது. அதற்கான மறுப்பே இக்கட்டுரை. மேலும் படிக்க

வள்ளுவரும் கணியரும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

தமிழில் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்களும், பல பொருளை உணர்த்த ஒரு சொல்லும் நிறைய வழக்கில் உள்ளன. அகராதிகளும், நிகண்டுகளும் இந்த அடிப்படையில்தான் தொகுக்கப் பட்டுள்ளன. இப்பின்னணியில் வள்ளுவர், கணியர் ஆகிய இரு சொற்கள் உணர்த்தும் பொருளை-தொழிலை விளக்குவது இன்றியமையாததாகும். கணியர்கள் பெரும் துறவிகளாகவும், அரசவையின் உள்படு கருமத்துள் பொறுப்பு வகிப்போராகவும் விளங்கியவர்கள். அத்துடன் வானியல், அறிவியல் துறைபோகி, காலத்தைக் கணிப்பவர்களாகவும் நாளும் கோளும் அறிந்து நிமித்தம் கூறுவதில் வல்லவர்களாகவும் விளங்கியவர்கள் என்பது இவ்வியலின் தொடக்கத்துள் விளக்கப் பட்டுள்ளது. மேலும் படிக்க

கணியம் எனும் சோதிடம் அறிவியலா? மூடத்தனமா? - ஆதி சங்கரன்

சித்தர் பெருமக்களின் இரக்கத்தினால் இயங்கும் புவியுயிர்ச் செயல்பாடுகளில் "கோள்நூல்" எனப்படும் சோதிடம் என்பது பாமரத் தனமான மூட நம்பிக்கையா? அல்லது இயற்கையின் ஆணைக்கொப்ப இயக்கப்படும் ஒரு ஒழுங்கான நிகழ்வமைப்பா என்பதே இங்குக் காணப் போந்த கருத்தாகும். முதற்கண், கோள்களின் இயக்கங்களை வரையறைப் படுத்திக் காணுகையில் ஒவ்வொரு கோளுக்கும் இயல்பே அமைந்ததான வடிவம் கோள வடிவமாகும். கோள் எந்த வடிவத்தை உடையதாக உள்ளதோ அவ்வடிவம் "கோளம்" எனப்பட்டது. கோள வடிவம் எனவும் வழங்கத் தலைப்படலாயிற்று. புவியின் வடிவம் கோளம் என்று "கோபர்நிகஸ்" என்ற மேனாட்டு இயற்பியல் அறிஞர் அறிவதற்கு முன்னதாகவே புவி மட்டுமின்றி ஏனைய கோள்களும் உருண்டை வடிவம் கொண்டவையே என மாணிக்க வாசக சுவாமிகள் பாடியுள்ளார். "அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்..." (திருவண்டப் பகுதி, திருவாசகம்) தொன் தமிழ்ச் சான்றோர் கோள்களின் பாதைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றின் விளைவுகளாய "ஒளி மறைவு" (கிரகணம்), பருவ கால மாற்றங்களை முன் உரைத்தமை யாவரும் அறிந்ததே. இனி சோதிடம் எனப்படும் கோள்நூல் பற்றி ஆயுங்கால், ஒவ்வொரு மனித