Skip to main content

ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும்


தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன. எழுத்துப் பாலியலில் பெண் எழுத்துக்களாகக் கருதப்படும் இவையே ஊழ்க மெய்யியலில் (யோகம்) முதன்மையான இடத்தைப் பெற்றவை. தமிழின் பிற எழுத்துக்கள் மொழிக்கு இலக்கணம் கூறும்காலை, இவ்வெழுத்துக்கள் மெய்யியலுக்கு இலக்கணம் கூற வல்லவை.

இவற்றுள் ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும், நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும். ஐயம் என்னும் சொல் சேட்டுமத்தைக் குறிப்பதாகும்.

ஐயம் > ஐ+ய்+அம்
ஐ - பகுதி
ய் - உடம்படுமெய்
அம் - விகுதி

ஐயம் என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாம். இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ‘ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம்.

இந்த ஐய நிலை கைவரப் பெற்ற ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே ஐயன் எனவும் ஐயனார் எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது.

ஐயன் > ஐ+ய்+அன்
ஐ - பகுதி
ய் - உடம்படுமெய்
அன் - ஒருமை ஆண்பால் விகுதி

இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே ஐயனார் எனும் சிறப்புத் தகுதி நிலையினால் தமிழர்களால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட ஐயா எனும் விளி குறிப்பதாயிற்று.

இவ்வாறு பல்லாற்றானும் சிறந்த நிலையில் போற்றத் தக்க கருத்துகளைத் தம் நூலில் வழங்கிய காரணத்தாலேயே திருவள்ளுவரைக் கூட அண்மைக் காலத்தில் ஐயன் திருவள்ளுவர் என வழங்கும் வழக்கு தோன்றியது.

இந்த ஐகாரம் எனும் எழுத்திற்கான பிறப்பிலக்கணத்தினைத் தொல்காப்பியர் உட்பட இலக்கண ஆசிரியர் பலரும் வரையறை செய்துள்ளனர். இவ்வெழுத்தொன்றும் தமிழுக்கோ, அல்லது தமிழ் மொழியினைப் போற்றி வளர்த்த ஆசீவகத் துறவிகளுக்கோ புதிதன்று.ஐ எனும் எழுத்தின் வரி வடிவினை நோக்குங்கால் இரண்டு யகரங்கள் ஒன்றுடன் ஒன்று உள் நோக்கிப் புணர்ந்த நிலையினைக் குறிக்கும்.தமிழில் உயிரெழுத்துக்களின் வரிவடிவங்கள் யாவும் வட்ட வடிவத்துடனேயே தொடங்கும் எனும் ஆசீவக மரபின் கருத்துக் கொப்ப ஐகாரத்தின் மேற்பகுதியில் உள்ள யகரம் ஒரு வட்டச் சுழியுடன் தொடங்கப்படுகிறது.


இந்த யகரம் ஆசீவகத்திற்கும் பின்னாளில் தமிழகத்தில் பரவிய சிவனியத்தில் கூட ‘நமசிவய’ எனும் மந்திரத்தில் விண்ணைக் குறிக்கும் எழுத்தாகவும், உயிரைக் குறிக்கும் இடுகுறியாகவும் காட்டப் பெறுகிறது.

யகரம் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் இணைக்கப் பெறுவதே ஐகாரத்தினைத் தோற்றுவிக்கும் வரிவடிவாம். இந்த யகரம் இருபகுதியிலும் (மேலும் கீழும்) வெளி நோக்கியவாறு எழுதினால் ஆசீவகக் குறியீடான இருபுற முத்தலைக்கோல் தோன்றும். இரண்டையும் ஒரு சிறு கோட்டால் இணைத்து இக்குறியினைப் பெறலாம். ஆசீவகர்களின் முதுமக்கள் தாழிகளிலும் இக்குறியீட்டினைக் கண்ட ஆய்வாளர்கள் யகரம் உயிரைக் குறிக்கும் எழுத்தாகையால் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் உள்ள யகரம் உயிர் பிறப்பதனையும் இறப்பதனையும் (அல்லது உயிர் ஒடுங்குதலையும்) குறிக்கும் குறியீடே இது எனக் கண்டுரைத்தனர்.

இவ்வளவு சிறப்புக்குரிய ஐகாரமும் அதன் இரு (மேல், கீழ்) பகுதிகளாய் இயங்கும் யகரமும் பிரிக்க இயலாதன. இந்த ஐகாரம் பயின்று வரும் தமிழிக் கல்வெட்டுகளில் கூட யகரத் தொடர்புடனே எழுதப் பட்டுள்ள வழக்கினைக் காணலாம். ஐகாரத்தின் சிறப்பினையும் அதன் மெய்யியல் தொடர்பினையும் விவரிக்க இக்கட்டுரை எழுதப் படவில்லை என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொண்டு செய்திக்கு வருவோம்.

இத்தகு ஐகாரத்தினை ஒழித்துக் கட்ட அதிகம் படித்த பலதும் ஆதிக்கம் செலுத்தும் சிலதும் முயல்வதாகத் தெரிகிறது. இதன் பின்னூற்றை ஆயுங்கால், ஒரு இனத்தினைச் சிதைக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் மொழியினைச் சிதைக்க வேண்டும் என்பது செயலாக்கச் சிந்தனையின் அடிப்படையாகும். எனவே, தமிழினத்தினை அழிக்க-அதன் தனிச்சிறப்பினையுடைய மொழியினை அழிக்க-வடுக வல்லாதிக்க வழிகாட்டியும் நிறுவனருமான ஈரோடு வெங்காய மண்டி இராமசாமி நாயக்கர் எனும் ஒருவரால் தொடங்கப் பட்ட இந்த அழிவு வேலைக்கு ‘எழுத்துச் சீர்திருத்தம்’ என்று பெயர். இவரது கருத்துப்படி ஐகாரம் ‘அய்’காரமாகக் குறிக்கப்படும். ஐகாரம் தனது இரண்டு மாத்திரைக்கான வரிவடிவினை இழந்து ஒன்றரை மாத்திரைக்கான வரிவடிவமாகச் சிதைக்கப்படுவதாகும். இந்த எழுத்துச் சீர்திருத்தத்தினை முன்மொழிந்த இவர் தமிழறிவோ அல்லது இலக்கண அறிவோ துளியும் இல்லாதவர் என்பது நாடறிந்ததே.

பெரிய சுவர் ஒன்றினை முழுதுமாக அழிக்க வேண்டுமாயின் ஆங்காங்கு ஒரு சில செங்கற்களைப் பிடுங்கினால் போதும். நாளடைவில் அந்த சுவரும் அந்த சுவரினால் அடைக்கப்பட்ட கட்டடமும் சிதைந்து அழியும் என்ற அடிப்படையில் தமிழ் மொழியினை வேரறுக்கத் துணிந்த வடுக வல்லடியினரின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டிய செயல் இது என்பது வெள்ளிடை மலை.

ஈ.வெ.இரா. எந்த நாளிலும் தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவர் அல்லர். மாறாக காட்டுமிராண்டி மொழியென்றே கூறிவந்தார். தமிழர் தம் அடையாளத்தினை வலுக்கட்டாயமாகத் தொலைக்கச் செய்து திராவிட அடையாளத்தினை தமிழர்கள் மீது திணித்தவர் அவர். அத்தகு அரசியலால்தான் தமிழரல்லாத இனங்கள் தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆளும் அவலம் ஏற்பட்டது.

இக்கருத்தினை ஒருசில சான்றோர் அவ்வப்போது முன் வைத்த போதெல்லாம், திராவிட மாயைக்கு ஆளாகிப் போய்விட்ட திராவிடத் தமிழர்களும் வாக்கு வணிகர்களும் உண்மைக்குப் புறம்பாய் மழுப்பியும் மயக்கியும் தமது வல்லாதிக்கத்தினை வழிமொழிந்து வருகின்றனர்.

மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை ஐ என்று குறிக்கும் வழக்கு சங்க காலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை பொய்யா மொழிப் புலவராம் திருவள்ளுவரும் தமது 771ஆம் திருக்குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளார். திருவள்ளுவரை ஐயன் திருவள்ளுவர் என்று வழங்கும் இந்த அரசு திருவள்ளுவராலும் முதுபெரும் மொழி ஆர்வலர்களாலும் போற்றப்படும் ஐகாரத்தினை காப்பதன் மூலமாக மட்டுமே திருவள்ளுவரையும் அவர்தம் அறிவு மரபினையும் ஆன்றோர் வளர்த்த தமிழையும் உண்மையில் மதிப்பதாகக் கருதப்படும் என அறிக.

தமிழர்களை திராவிட மாயைக்கு ஆளாக்கித் தமிழரல்லாத இனங்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவதற்கான பல்வகை சூழ்ச்சிகளில் ஒன்றாகவே இந்த மொழிச்சிதைவு எழுத்துச் சீர்திருத்தம் இருப்பதனை தமிழர் உணர்ந்து கொண்டு இந்த ஐகாரம் மட்டுமன்றி ஏனைய எழுத்து வடிவங்களையும் காக்க முனைவோம் என்ற அறைகூவலுடன் முடிக்கின்றோம்.

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்திற்காக,
நன்றியுடன் விடைபெறும்
ஆதி. சங்கரன்
கோரக்கர் அறிவர் பள்ளி

Comments

www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
SUNDARAN said…
தமிழின் உயிர் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு சுரப்பியை இயக்க வல்லது.அ முதல் ஔ வரை . ஆயுத எழுத்தான ஃ உயிர் மூலக்கூறின் வடிவாகும்.கீழிருக்கும் கண்கள் இரண்டும் புறக்கண்கள் ஆகும். மேலுள்ள கண் அகக்கண் ஆகும்.தமிழ் பிரபஞ்ச மொழி.யாரும் கண்டுபிடித்ததல்ல!இயற்றமிழ்.
SUNDARAN said…

தமிழ்

உயிருக்கு பாவனை சுடர்
உயிருக்கு சுடரும் பாவனை
உயிருக்குள் சுடரும் பாவனை
உயிருக்குள் சுடரும்
உள் சுடரும்
உள்ளிருந்து சுடரும்
உள் இருப்பது சுடரும்
உள் இருந்தால் சுடரும்
உள்ளிருந்தால் சுடரும்
அனைத்துக்கும் ஓர் பொருள்.
நீக்கமற நிறை
மூன்றை விலக்கி முயல்
உயிர் சுடர்ந்து வினையை அகற்று.
உயிர் சுடர வினை அகலும்.
வேளியால் விலக்கு
வெளியால் விளக்கு
ஈர்ப்பு விதி
ஈர்ப்பே விதி
இங்கு நான்
அங்கு எதுவும் இல்லை.
நான்
நான் மட்டும்
நான் மட்டுப்பட
நான் மட்டுப்படுவது
நலம் அளிக்கும்.
சேர்ந்தால் நான்
பிரிந்தால் இல்லை.
நான் x இல்லை
நானில்லை.
நான்
இல்லை.
அ வென்றால் வாய் அகலும்
ஆ வென்றால் அகண்டு விரியும்.
என் மொழி எனக்கு தெரியும்.
அ உ ம்
ஆவும்
அனல் என்றால் தொட்ட இடம் பற்றும்.
உனக்கு உண்டான காரணம்போல் அவனுக்கும்.
சத் உணர்ச்சியானால் சத்து
சத் தொழில் பட்டால் சித்து
ஓர்மையும் கூர்மையும் உண்டானால் சத்
வாயில் விழாதே
ஓர்மையும் கூர்மையும் கூடினால் ஓட்டம்
ஓர்மையும் கூர்மையும்
ஒன்றாத வரை ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
ஒன்றும் இல்லை
ஒன்றிலிருந்து ஒன்று வரை
ஒன்றிலிருந்து ஒன்றும் இல்லை வரை.
ஒன்றோடு ஒன்று ஒன்றும் வரை
ஒன்றும்
ஒன்றினால் ஒன்றும்
ஒன்றில் ஒன்றாய்
ஒன்றில் ஒன்றாய்
எதிர்பதம்.
சமம்
சம
சம ஆதி
சமாதி
ஒன்றிலிருந்து ஒன்றுமில்லை வரை
வரை
அதுவரை
வரைக்கு அழகு
வரையற்று இருத்தல்.
எல்லாம் உன் விருப்பப் படிதான்
அழுக்குக்கு திணிவு
சிற்றலை வேண்டாம் பேரலை
சிற்றலையில் தொடக்கம்
பேரலையில் முடியும்
அலைக்கு அலகு அலையாதே
அலையாதே
ஒரு சொல்லுக்கு இரு வாசல்
எதிர் திசை
வாசலும் எதிர் திசை
சூழலை ஏற்றுக்கொள்
சூழலை ஏற்றுக் கொல்
இதுதான் தமிழ்.
ஒரு அசைவில் மாறும்
அசைந்தால் நினைவு
நினைவால் நேர்வது
அசையாமல் நிலை
நிலை தடுமாற்றம்
தடு மாற்றம்
மாற்றம் தவிர்
தவிர்த்தால் தழல்.
நிலைதடுமாற்றம்
நேராத வரை யூகம்
யூகத்தால் நேரும்.
அவனது நன்மைக்கு அவன் நம்புவான்
நம்புவது சுபாவம்
நம்பினால் நகரும்
மையத்தில் சுழிக்கும்
சுழி சுத்தமானால்
கௌதமனுக்கு புத்தம்
தமிழால் சுத்தம்
முன்னோர் வழி வழி
முன்னோர் வழி தோன்றல்
ஒன்றிலிருந்து இரண்டு
ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தம்
ஒன்று மின் வழி
ஒன்று காந்த வழி
மின் காந்தம்
மின்
காந்தம் எதிர்பதம்
மின் x காந்தம்
மின்காந்தமாக தமிழ்
ஒரே அலை எதிர்பதம்.
இரு முனை
இரு முனை இணைந்தால்
எதுவுமில்லை.
எதுவுமில்லை
எதுவும் இல்லை
இல்லை
இல்லை என்றால் பரிசுத்தம்
பரி சுத்தம் பரி பூரணம்
பரி பூரணமும் பூரணம்
முடிவே இல்லை
இல்லையும் இல்லை
இங்கே இரண்டு வழி
இல்லவே இல்லை.
சேர்ந்தால் இருக்கும்
( சேரவே இல்லை )
பிரிந்தால் இருக்காது
பிரி
பிரிவு
பிரிவு விரிவு
விரிவு
விரி வு
வு
அ வு ம்
அவும் அவும்
வுவும் வுவும்
ஔ ஆகும்
அ உ ம்
அவும்
ஆவும்
இணைந்தால் ஆகும்.
இணை
இணைத்தால் சுமை
இணையாமல் பிரி
இணை பிரி
இணை பிரிந்தால் இணையற்றது
இணை பிரிந்தால்
இணையற்றது
இணை பிரிந்தாலும்
இணையற்றது
இணை முடிந்தாலும்
இணையற்றது
பிரிந்தால்
பிரி
முடிந்தால்
முடி.
தானாக
முடிவுக்கு வரும்
தான் ஆக
முடிவுக்கு வரும்
தானே
தானாக செல்
துணை
வேண்டாம்
தானே
ஆவதால்
தமிழ்.
பிரபஞ்சம்
மின்காந்தம்
பிரபஞ்சமே
மின் காந்தம்
மின் x காந்தம்
ஒரே அலை
ஒன்றுக்கு ஒன்று எல்லை
இரண்டுக்கும் நடுவில்
நடுவில்
நானும் பிரபஞ்சமும்
நானே பிரபஞ்சம்
பிரபஞ்சமே நான்.
நான் என்பது தமிழ்
தமிழே நான்
நான் மொழிந்தால் தமிழ்
தமிழ் மொழிந்தால் நான்
மொழிந்தால்
தமிழும்
நானும்
மொழிவோம்
உனது
மொழியை
நீ
மொழி
தமிழ் மொழி
மொழி வழி
தமிழ் மொழி அல்ல வழி
மொழி வழி
மொழி வழி போனால்
முடியும்.
மொழி வழி நட
தமிழ்
மொழி
வழி
நட
வழியே மொழி
உன் வழியே மொழி.
பிரபஞ்சமே
ஒரு சொல்
அது
தமிழ்.
தமிழை அறிந்தால்
தன்னை அறியலாம்
தன்னை அறிந்தவன்
தமிழை அறிவான்
தானே தமிழ்
தமிழ் தானே
தானே ஆனது
தானே ஆனதால்
தமிழ்.

Qmax Selva said…
Miga miga arumai thamizh
Qmax Selva said…
Miga miga arumai thamizh
Qmax Selva said…
Miga miga arumai thamizh
Ramesh DGI said…
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Latest Tamil News
Logavaaniyar said…
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் என்ற நூல் தற்பொழுது எங்கே கிடைக்கும் அதன் விலை என்ன எவ்வாறு பெறுவது என்றும் கூறுங்கள்
Ragu said…
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் (அய்)
ஐ என நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் - தொல்காப்பியம்

தொல்காப்பியரும் ஒரு வடுக வந்தேறியோ. தமிழை தெரியாதவர்கள் எல்லாம் எழுதினால் இவ்வாறுதான்.
Unknown said…
ஆசீவகச் சின்னங்கள் பற்றிய சித்திரங்களும் பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். விளக்கங்களை வைத்து பற்பனை செய்வது கடினமக உள்ளது.
ஜயா வணக்கம் க நெடுஞ்செழியன் ஜயா புத்தகம் கிடைக்குமா ஜயா
Unknown said…
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள் புத்தகம் தேவைப்படுவோர் 7639420910,9600690068 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.நன்றி
rafertylascala said…
Oculus Quest 2 Hockey Games - vntopbet 11bet 11bet 메리트 카지노 쿠폰 메리트 카지노 쿠폰 우리카지노 우리카지노 24Wynn Palace Review » Online Casino Review 2021 | Deposit

Popular posts from this blog

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்

முனைவர் க. நெடுஞ்செழியன் அணிந்துரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார். ‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவக

ஆதித் தமிழர் மெய்யியல் - ஆதி. சங்கரன்

ஆதித் தமிழர் மெய்யியல் ஆதி. சங்கரன் முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம். பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம். 1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல். 2. ம